உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தவறி விழுந்து மின் ஊழியர் பலி

தவறி விழுந்து மின் ஊழியர் பலி

மதுரை: மதுரையில் டிரான்ஸ்பார்மர் பழுது நீக்கும் பணியின்போது தவறி விழுந்த மின்வாரிய ஊழியர் ஜெயக்குமார் 45, உயிரிழந்தார்.சிவகங்கை மாவட்டம் கொந்தகையைச் சேர்ந்த ஜெயக்குமார், பதிமூன்று ஆண்டுகளாக தற்காலிக ஊழியராக பணிபுரிந்தார். நேற்று காலை கோமதிபுரம் மல்லிகை மேற்குத் தெரு டிரான்ஸ்பார்மரில் பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டார். தவறி கீழே விழுந்தவர், தலையில் காயமடைந்ததால் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இவருக்கு 3 குழந்தைகள் உள்ளன. அண்ணாநகர் போலீசார் விசாரிக்கின்றனர்.மழைக்காலம் துவங்கிய நிலையில் ஊழியர் காலிப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !