உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாளை மின்வாரிய குறைதீர் கூட்டம்

நாளை மின்வாரிய குறைதீர் கூட்டம்

மதுரை : மதுரை மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் தலைமையில் வடக்கு கோட்ட மின்நுகர்வோர் குறைதீர் நாள் கூட்டம் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள மண்டல அலுவலக வளாகத்தில் நாளை (அக்.3) காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கிறது. இப்பகுதியில் உள்ள தமுக்கம், ரேஸ்கோர்ஸ், செல்லுார், தாகூர்நகர், சொக்கிக்குளம், திருப்பாலை, ஆனையூர், ஆத்திக்குளம், அண்ணாநகர், கே.கே.நகர், புதுார், மேலமடை பகுதியினர் தங்கள் குறைகளை நேரிலே, மனுக்கள் மூலமோ தெரிவிக்கலாம் என, செயற்பொறியாளர் ஸ்ரீராம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ