உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / வேலைவாய்ப்பு பயிற்சி

வேலைவாய்ப்பு பயிற்சி

மதுரை: மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ள மத்திய எம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் இளைஞர்களுக்கு கட்டண பயிற்சிகளை அறிவித்துள்ளது. அக்.14 முதல் நவ.5 வரை டிவி சிப் லெவல் பயிற்சி நடக்கிறது. இதற்கான கட்டணம் ரூ.5 ஆயிரம். வருமான வரி கணக்காளர் பயிற்சி அக்.24, 25ல் நடக்கிறது. இதற்கான கட்டணம் ரூ.3540. பதினெட்டு வயது நிரம்பிய பிளஸ் 2க்கு மேல் இருபாலரும் பங்கேற்கலாம். காலை 10:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை பயிற்சி நடைபெறும். பயிற்சி முடித்தவர்களுக்கு மத்திய அரசின் பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். முன்பதிவுக்கு 86956 46417 ல் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !