உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பைபாஸ் ரோட்டில் கண்துடைப்பாக ஆக்கிரமிப்பு அகற்றம்

பைபாஸ் ரோட்டில் கண்துடைப்பாக ஆக்கிரமிப்பு அகற்றம்

மதுரை: மதுரை பைபாஸ் ரோட்டில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றும்படி நெடுஞ்சாலைத்துறை விடுத்த எச்சரிக்கையை யாரும் பொருட்படுத்தியதாக தெரியவில்லை. அதிகாரிகளும் கண்துடைப்பாகவே நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக உருவான பைபாஸ் ரோட்டின் இருபுறமும் ஏராளமான கடைகள் ஆக்கிரமித்துள்ளன. வைகை ஆற்றுப்பாலம் முதல் போடிலைன் ரயில்வே மேம்பாலம் வரை இருபுறமும் ஏராளமான கடைகளால் தினமும் 'பீச்' போல களைகட்டி வருகிறது. நெடுஞ்சாலை, போலீஸ், மாநகராட்சி நிர்வாகங்கள் அவ்வப்போது கண்துடைப்பாக நடவடிக்கை மேற்கொள்வதோடு சரி.இந்நிலையில் நேற்று முன்தினம் ஆக்கிரமிப்புகளை அகற்றப் போவதாகவும், அதற்கு முன் கடைக்காரர்களே அகற்றிக் கொள்ளாவிடில் நடவடிக்கை பாயும் என்றும் நெடுஞ்சாலைத் துறை 2 நாட்களுக்கு முன் வீராப்பு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. கடைக்காரர்கள் பதறிப்போவர் என்று பார்த்தால், யாரும் கண்டுகொள்ளவே இல்லை.பெத்தானியாபுரம் பகுதியில் புல்டோசருடன் வந்த நெடுஞ்சாலை, போலீசார், மாநகராட்சியினர் பெயருக்கு சில கடைகளை உடைத்தனர். அருகிலேயே இருந்த அரசியல் கட்சிகளின் ஆக்கிரமிப்புகளை கண்டு கொள்ளவில்லை. அதேநிலைதான் பொன்மேனி, போடிலைன் பகுதி வரை இருந்தது. பிரியாணி கடைகள், வடை கடைகள், குளிர்பான, பழச்சாறு கடைகள் என எதுவும் நேற்று மாலைவரை அசையவே இல்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

thangam
மார் 25, 2025 00:51

ஈகிள் பார்க் ரோட்டில் 100 அடி வரை ஆக்கிரமித்து வைத்துள்ளது அதைக் கேட்ட துப்பில்லை.. அழகிரியின் பினாமி சொத்து என்பதால் எவரும் கேட்பதில்லை


சமீபத்திய செய்தி