உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இன்ஜின் கோளாறு: செந்துார் எக்ஸ்பிரஸ் தாமதம்

இன்ஜின் கோளாறு: செந்துார் எக்ஸ்பிரஸ் தாமதம்

தஞ்சாவூர்: திருச்செந்துாரில் இருந்து சென்னை செல்லும் செந்துார் எக்ஸ்பிரஸ் ரயிலில், இன்ஜின் பழுது ஏற்பட்டதால், கும்பகோணத்தில் இருந்து 1 மணி நேரம் தாமதமாக சென்றது. திருச்செந்துாரில் இருந்து சென்னை எழும்பூர் வரை செல்லும் செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் இரவு, 8:30 மணிக்கு, திருச்செந்துாரில் இருந்து, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக, சென்னைக்கு புறப்பட்டது. நேற்று அதிகாலை, 3:35 மணிக்கு, கும்பகோணம் அருகே, சுந்தரபெருமாள் கோவில் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்தது. மீண்டும் ரயில் புறப்படும் போது, இன்ஜினில் கோளாறு ஏற்பட்டது. தொடர்ந்து ரயிலை இயக்க முடியாததால், ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அங்கு வந்த ரயில்வே அதிகாரிகள், பொறியாளர்கள், இன்ஜினில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், பழுது சரி செய்ய முடியாததால், தஞ்சாவூரில் இருந்து மாற்று இன்ஜின் கொண்டு வரப்பட்டு, 1 மணி நேரம் 20 நிமிடம் தாமதமாக, காலை, 5:19 மணிக்கு, செந்துார் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னை புறப்பட்டு சென்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை