உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

திருப்பரங்குன்றம்: தென்பழஞ்சி அரசு நடுநிலைப் பள்ளியில் சுற்றுச்சூழல் மன்றம் சார்பில் அடுப்பில்லா ஆரோக்ய சமையல் என்ற தலைப்பில் புகையில்லா சுற்றுச்சூழல் ஆரோக்கியம் நிகழ்ச்சி நடந்தது. பள்ளித் தலைமை ஆசிரியர் அன்புமொழி தலைமை வகித்தார். ஆசிரியர் மேகலா முன்னிலை வகித்தார். மாணவர்கள் தயாரித்த நிலக்கடலை, பொரிகடலை, அவல், சிறுதானிய உருண்டைகள், துளசி, புதினா, இளநீர், கேரட் பயன்படுத்தி பழரசம், கேக் வகைகள், பழக்கலவைகள், காய்கறி சாலட்கள் கண்காட்சியில் இடம் பெற்றன. சிறந்த தயாரிப்புகளுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் பயிற்றுனர் பர்வன்பானு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சிவராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை