முதல்வர் பங்கேற்றும் தீர்வு இல்லை
உசிலம்பட்டி : பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோயில் வளாகத்தில் கிராம சபை கூட்டம் ஊராட்சித் தலைவர் முருகானந்தம் தலைமையில் நடந்தது.வி.ஏ.ஓ., ராதாகிருஷ்ணன், ஊரக வளர்ச்சித்துறை சார்பில் ஜெயராமன், நெடுஞ்சாலை, வேளாண்மைத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர். பேயம்பட்டிக்கு ரோடு வசதி இல்லாததால் பஸ்கள் வராமல் உள்ளன.பஸ் வர ஏற்பாடு செய்ய வேண்டும். ஒச்சாண்டம்மன் கோயில் வளாகத்தில் சேரும் குப்பையை வாரம் ஒரு முறை சுத்தப்படுத்த வேண்டும். திம்மநத்தத்தில் இருந்து பாப்பாபட்டி வரும் ரோடு, உசிலம்பட்டியிலிருந்து கீரிபட்டி வழியாக வரும் ரோடுகள் மேடுபள்ளங்களாக உள்ளன. இதனை சீர்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தனர்.2021ல், காந்தி ஜெயந்தியை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் பாப்பாபட்டி கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்றார். அந்த கூட்டத்தின் போதும் மக்கள் இந்த ரோடுகளை சீர்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.