செயற்குழுக் கூட்டம்
வாடிப்பட்டி: பரவையில் வி.சி.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர் அமைப்பது குறித்து செயற்குழுக் கூட்டம் நடந்தது. செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனை வளவன் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் தமிழாளன் வரவேற்றார். ஓட்டுச்சாவடி முகவர் நியமித்தல் மற்றும் திருமாவளவன் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தேர்தல் குறித்து ஆலோசனை வழங்கப் பட்டது. நிர்வாகிகள் செல்லப்பாண்டி, மு த்துப்பாண்டி, முனியாண்டி மகளிரணி புலியம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிர்வாகி பால்பாண்டி நன்றி கூறினார்.