உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  ஏற்றுமதியாளருக்கான கடன் திட்ட ஆலோசனை நிகழ்ச்சி  ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., ஏற்பாடு

 ஏற்றுமதியாளருக்கான கடன் திட்ட ஆலோசனை நிகழ்ச்சி  ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., ஏற்பாடு

மதுரை: மதுரை ஆர்.எல்., இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ்மென்ட் ஸ்டடீ ஸில் (ஆர்.எல்.ஐ.எம்.எஸ்.,) 'இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு ஏற்றுமதி கடன் உத்தரவாத கார்ப்பரேஷன் (இ.சி.ஜி.சி.,) வழங்கும் திட்டங்களும், ஆலோ சனைகளும்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் இ.சி.ஜி.சி., மதுரைக் கிளை சீனியர் மேலாளர் சுபாஷ் குமார் ஜா, ஏற்றுமதி கடன் உத்தரவாத கார்ப்பரேஷன் வழங்கும் பல்வேறு திட்டங்கள், ஏற்றுமதிக் கடன் காப்பீடு, இடர் மேலாண்மை தொடர்பாக ஆலோசனை வழங்கினார். ஆர்.எல்.ஐ.எம்.எஸ்., இயக்குநர் சுப்ரமணியன் முன்னிலை வகித்தார். சுபாஷ் குமாருக்கு எம்.பி.ஏ., மாணவர் ரபீக் ராஜா நினைவுப் பரிசு வழங்கினார். ஏற்றுமதி வர்த்தகம், சர்வதேச வணிகம் குறித்த நடைமுறை அறிவை பெற்று பயனடையும் வகையில் இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ