உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விண்வெளி தொழில் பூங்கா இடைக்கால உத்தரவு நீட்டிப்பு

விண்வெளி தொழில் பூங்கா இடைக்கால உத்தரவு நீட்டிப்பு

மதுரை; துாத்துக்குடி மாவட்டம் ஆதியாகுறிச்சியில் விண்வெளி தொழில் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிரான வழக்கில், 'இவ்விவகாரத்தில் தற்போதைய நிலை தொடர வேண்டும்' என ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீட்டித்தது.உடன்குடி அருகே கொட்டாங்காடு சந்திரசேகரன் தாக்கல் செய்த மனு:திருச்செந்துார் அருகே ஆதியாகுறிச்சியில் தமிழக அரசு சார்பில் விண்வெளி தொழில் பூங்கா அமைய உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விதிகளை பின்பற்றவில்லை. கடல்நீர் உள்ளே புகுந்துவிடும். அதே பகுதியில் ஏற்கனவே பல்வேறு திட்டப் பணிக்கு 4000 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. விண்வெளி பூங்காவிற்கு நிலம் கையகப்படுத்தினால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். மக்களின் மறுவாழ்விற்கான ஏற்பாடு செய்யாமல் நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது. தடை விதிக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.மார்ச் 13ல் இரு நீதிபதிகள் அமர்வு, 'இவ்விவகாரம் தற்போது எந்த நிலையில் உள்ளதோ அதே நிலை தொடர வேண்டும்,' என இடைக்கால உத்தரவிட்டது. நேற்று விசாரித்த நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, எஸ்.ஸ்ரீமதி அமர்வு ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால உத்தரவை ஏப்.,28 வரை நீட்டித்து உத்தரவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை