உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / லோகோ பைலட்டுகளுக்கு வசதிகள் ஜோர்

லோகோ பைலட்டுகளுக்கு வசதிகள் ஜோர்

மதுரை : ரயில்களில் பயணிப்போருக்கு அடிப்படை வசதிகள் உள்ளன. ஆனால் ரயிலை இயக்கும் லோகோ பைலட்டுகளுக்கு வசதியான ஓய்வறைகள் பல நாள் கோரிக்கையாகவே இருந்தன. கடந்த 10 ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகம் அவற்றை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களை மேற்கொண்டது. மதுரை, திருநெல்வேலி, ராமேஸ்வரம் உள்ளிட்ட இடங்களில் ஓய்வறை பல்வேறு வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டன.மதுரையில் 2024ல் 40 ஏ.சி., அறைகள், பெண்களுக்கான தனி அறைகள், இலவச வைபை வசதி, குளியலறை, கழிப்பறை, பெட் கவர்கள், சலவை செய்ய இடம், நாளிதழ்கள்,உணவு, தியான அறை, நடைபயிற்சிக்கான இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் அமைக்கப்பட்டது. லோகோ பைலட் குறைகளை கியூ. ஆர்., கோடு மூலம் புகார் அளித்தால் உடனடியாக நிவர்த்தி செய்யப்படுகிறது. இது தவிர ரயில் இன்ஜின் அறையில் ஏ.சி., வசதியுடன்கூடிய இருக்கைகள்உள்ளன. கழிப்பறை வசதி ஏற்படுத்த சோதனை செய்து வருகின்றனர்.பனிக்காலங்களில் பாதுகாப்பு கருவிகள், ரயில் விபத்தை தவிர்க்கும் கவச் தொழில்நுட்பம் லோகோ பைலட்டுகளுக்கு எச்சரிக்கை அளிக்கக்கூடியது. ரயிலை நிறுத்த நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய பிரேக் வசதி உள்ளிட்டவை இன்ஜின்களில் அமைக்கப்பட்டுள்ளன. இவை லோகோ பைலட்டுகளின் வேலையை எளிமையாக்கும் முயற்சியில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக லோகோ பைலட்டுகளுக்கான தேவையான ஓய்வு அவசியமானது எனும் நோக்கில் பல்வேறு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !