குடும்ப அறிமுக விழா
பேரையூர்: பேரையூரில் ரெட்டியார் உறவின்முறை சார்பாக பொதுக்குழு மற்றும் குடும்ப அறிமுக விழா நடந்தது. பா.ஜ., மாநில அமைப்புசாரா செயலாளர் சோமசுந்தரம் மத்திய அரசின் திட்டங்களை விளக்கினார். பொதுச் செயலாளர் ராஜாபூர்ணசந்திரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் சேகர், பொருளாளர் வேலுச்சாமி மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்.