உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / டிராக்டர் மீதுபஸ் மோதி விவசாயி பலி

டிராக்டர் மீதுபஸ் மோதி விவசாயி பலி

திருமங்கலம்: விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் விவசாயி மாடசாமி 35, இவர் திருப்பூரில் வாங்கிய புதிய டிராக்டரை ஊருக்கு ஓட்டி வந்தார். நண்பர் பாலமுருகன் அருகில் அமர்ந்துஇருந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு திருமங்கலம் 4 வழிச்சாலையில் காட்டு பத்திரகாளி அம்மன் கோயில் அருகே நாகர்கோவில் சென்ற அரசு பஸ் மோதியது. அதே வேகத்தில் டிராக்டர் மீது ஏறி நின்றது. மாடசாமி சம்பவ இடத்திலேயே பலியானார். பாலமுருகன் காயமடைந்தார். திருமங்கலம் நகர் போலீசார், தீயணைப்பு வீரர்கள் நெடுஞ்சாலை மீட்பு படையினர் டிராக்டர் மீது ஏறி நின்ற பஸ்சை அகற்றி மாடசாமி உடலை மீட்டனர். பாலமுருகன் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இச்சம்பவத்தால் சமயநல்லுார் - விருதுநகர் 4 வழிச் சாலையில் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை