மேலும் செய்திகள்
நெற்களம் அமைக்க விவசாயிகள் கோரிக்கை
11-Apr-2025
மேலுார்: திருவாதவூர் பகுதியில் நெல்லை உலர்த்த களம் இல்லாததால் ரோடுகளில் நெல்லை உலர்த்தும் அவலம் நிலவுகிறது.திருவாதவூரில் மறிச்சுகட்டி கண்மாய் அருகே சுண்ணாம்பூர் - இலுப்பக்குடி பெரியாறு கால்வாய் செல்கிறது. இக்கால்வாய் நீரை பயன்படுத்தி 300 க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதியில் அறுவடை செய்த நெல்லை கதிரடித்து பிரித்து, உலர்த்த நாற்பதாண்டுகளுக்கு முன் நெற்களம் கட்டப்பட்டது. சில ஆண்டுகளாக பராமரிப்பு இல்லாததால் களத்தில் வெடிப்பு ஏற்பட்டு, சீமைக் கருவேல மரங்கள் முளைத்து சிதிலமடைந்துள்ளது.அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது: ஏக்கருக்கு ரூ. 35 ஆயிரம் செலவு செய்து உற்பத்தி செய்யும் நெல்லை உலர்த்தி காய வைத்தால் நெல் கெட்டுப்போகாது. நெல்லை உலர்த்தாவிட்டால் அரிசியாகவோ, விதை நெல்லாகவோ பயன்படுத்த முடியாமல் வீணாகிவிடும். களம் சிதலமடைந்துள்ளதால் ரோடு, மண் தரைகளில் நெல்லை உலர்த்தும் அவலம் நிலவுகிறது.புதிய களம் கட்டித்தரும்படி ஒன்றிய அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் பலனில்லை. எனவே ஒருபோக சாகுபடி துவங்கும் முன் களம் கட்டித்தர வேண்டும் என்றனர்.ஒன்றிய அதிகாரிகள் கூறுகையில், ''களம் தேவை குறித்து தற்போதுதான் தெரிய வருவதால், ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
11-Apr-2025