உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகள் வியாபாரிகள் கலந்துரையாடல்

விவசாயிகள் வியாபாரிகள் கலந்துரையாடல்

மதுரை: மதுரை விற்பனைக்குழுவின் கீழ் உள்ள வாடிப்பட்டி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள் வியாபாரிகள் கலந்துரையாடல் நடந்தது. மதுரை விற்பனைக்குழு செயலாளர் அழகுராஜா முன்னிலை வகித்தார். வேளாண் வணிகம், வேளாண் விற்பனை துணை இயக்குநர் மெர்சி ஜெயராணி பேசியதாவது: விவசாயிகளின் நெல், அரசின் கொள்முதல் மையம் மூலம் நேரடியாக பெறப்படுகிறது. இங்கு விளையும் தேங்காய்கள் மறைமுக ஏலம் மூலம் வியாபாரிகளிடம் சரியான விலை பேசப்பட்டு விற்கப்படுகிறது. தமிழகத்தில் முதன்முறையாக மட்டையுடன் கூடிய தேங்காய் விற்கப்படுகிறது. 2022ல் தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ - நாம்) திட்டம் கொண்டு வரப்பட்டு ரூ.23 கோடி மதிப்பிலான 21.5 டன் அளவுள்ள விவசாயிகளின் விளைபொருட்கள் விற்கப்பட்டுள்ளன என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !