உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / விவசாயிகளும் ஏற்றுமதி செய்யலாம்

விவசாயிகளும் ஏற்றுமதி செய்யலாம்

மதுரை: வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபெடா) சார்பில் மதுரையில் உழவர் உற்பத்தியாளர் நிறுவனப் பிரதிநிதிகளுக்கான வேளாண் ஏற்றுமதி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கு நடந்தது. உதவி மேலாளர் முத்தையா பேசுகையில் ‘‘ஏற்றுமதி செய்வதற்கு ஏற்றுமதி இறக்குமதி (ஐ.இ.சி.,) கோடு, ஆர்.சி.எம்.சி., சான்றிதழ் தேவைப்படும். அரிசி, தானியங்கள் போன்ற வேளாண் சார்ந்த 80 சதவீத பொருட்கள் ஏற்றுமதிக்கு அபெடா வழிகாட்டுகிறது. ஏற்றுமதிக்கு தரச்சான்றிதழ் அவசியம். தமிழகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களை ஏற்றுமதி செய்தால் ஐரோப்பிய நாடுகளில் வரவேற்பு கிடைக்கும்’’ என்றார். மாவட்ட தொழில்மைய பொதுமேலாளர் கணேசன் பேசுகையில் ‘‘கிராமப் பொருளாதாரம் வளர வேண்டுமெனில் ஒவ்வொருவரும் சிறிய அளவிலாவது தொழில் செய்ய வேண்டும். நமது கனவு வளர்ச்சிக்கான கனவாக இருக்க வேண்டும். விவசாயிகள் ஒற்றுமையாக இணைந்து உழவர் உற்பத்தியாளர் நிறுவனமாக உருவாக்கினால் ஏற்றுமதி தொழிலில் சாதிக்கலாம். உற்பத்தி தொழிலுக்கான கருவிகள் வாங்குவதற்கு 25 சதவீத அளவு அதிகபட்சமாக ரூ.ஒரு கோடிக்கு மேல் மானியம் வழங்கப்படுகிறது’’ என்றார். வேளாண் வணிகம் மற்றும் விற்பனைத்துறை, தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர்கள் உமாராணி, நபார்டு வங்கி உதவிப்பொது மேலாளர் சக்திபாலன், அபெடா உதவி மேலாளர் தீபக் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை