விவசாயிகள் கூட்டமைப்பு கோரிக்கை
திருமங்கலம்: மதுரை தெற்கு, வடக்கு மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு கூட்டம் திருமங்கலத்தில் நடந்தது. தெற்கு மாவட்ட செயலாளர் முத்தையா தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட செயலாளர் சுந்தரபாண்டியன் முன்னிலை வகித்தார். மதுரையில் வேளாண் பல்கலை அமைக்க வேண்டும், அலங்காநல்லுார் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க வேண்டும், நிலையூர் கம்பிக்குடி கால்வாய் விரிவாக்க திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காவிரி விவசாயிகள் சங்க மாநில தலைவர் பழனியப்பன், கூட்டமைப்பு பொதுச்செயலாளர் அர்ச்சுனன், மாநில செயலாளர் ராமமுருகன் பேசினர். தெற்கு மாவட்ட தலைவர் பாண்டி நன்றி கூறினார்.