விவசாயிகள் குறைதீர் கூட்டம்
திருமங்கலம் : திருமங்கலம் தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர் கூட்டம் சமூக நலத்துறை தாசில்தார் ராமச்சந்திரன் தலைமையில் நடந்தது.தங்களாச்சேரி விவசாயி பால்பாண்டி பேசுகையில், ''தங்களாச்சேரி பஸ் ஸ்டாப்பில் உள்ள வேளாண் விவசாய கூடம் இடியும் நிலையில் உள்ளது. உடனடியாக இடித்து அப்புறப்படுத்த வேண்டும். தும்மகுண்டு துணை மின் நிலையத்தில் இருந்து தங்களாச்சேரி பகுதிக்கு குறைந்த அளவு வோல்டேஜ் மின்சாரம் வருவதால் அடிக்கடி விவசாய மின் மோட்டார்கள் பழுது ஏற்படுகிறது. மும்முனை மின்சாரம் சரியான அளவில் வழங்குவதற்கு மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும்''என்றார்.விவசாயி பழனி, ''மேல உரப்பனுாரில் சாக்கடை கழிவு நீர் ரோட்டில் செல்வதால் தொற்று நோய் பாதிப்பு ஏற்படுவதோடு போக்குவரத்து பாதிப்பு உள்ளது. உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.