உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / உற்பத்தி மானியம் ரூ.30 ஆயிரம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

உற்பத்தி மானியம் ரூ.30 ஆயிரம் வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

உசிலம்பட்டி: 'விவசாயிகளுக்கு உற்பத்தி மானியமாக ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும்' என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். உசிலம்பட்டியில் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் டிச. 28ல், ஈரோட்டில் நடைபெறும் விவசாயிகள் உரிமை மீட்பு, கடன் விடுதலை மாநாடுக்கான ஆலோசனைக்கூட்டம் நடந்தது. நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமை வகித்தார். கோழிப் பண்ணை சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் மகாலிங்கம், மாநிலத் துணைத் தலைவர் உதயகுமார், அமைப்புச் செயலாளர் நேதாஜி, மாவட்ட நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், காராமணி, திருப்பதி, ராஜேஸ்வரன், 58 கிராம பாசன விவசாயிகள் சங்க முன்னாள் தலைவர் சின்னயோசனை, போஸ் சுஜித், செல்லையா உள்பட பலர் கலந்து கொண்டனர். விவசாயிகள் வாங்கிய பயிர்க்கடன் உள்பட அனைத்து கடன்களையும் மத்திய, மாநில அரசுகள் தள்ளுபடி செய்ய வேண்டும். தமிழக அரசு மானியம் தருகிறோம் என பயனில்லாத திட்டங்களை நிறுத்தி விட்டு விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் உற்பத்தி மானியமாக வழங்க வேண்டும். பனை, தென்னையில் கள் இறக்கி விற்க விதித்துள்ள தடை நீக்க வேண்டும். பாமாயிலுக்கு பதில் நிலக்கடலை, தேங்காய், நல்லெண்ணெயை மானிய விலையில் ரேஷன் கடைகளில் விற்க வேண்டும் போன்றவற்றுக்காக நடக்க மாநாட்டில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்க வேண்டும் என பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை