மேலும் செய்திகள்
கிராமங்களில் விதைப்பு பணிகள் மும்முரம்
24-Aug-2025
பேரையூர் : பேரையூர் தாலுகாவில் போதிய மழை இல்லாததால் மானாவாரி விவசாயிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இப்பகுதியில் ஒரு மாதத்திற்கு முன்பு சிறிதளவு மழை பெய்தது. இதனால் கிடைத்த ஈரத்தை பயன்படுத்தி விவசாயிகள் மானாவாரி நிலங்களில் உளுந்து, பாசிப்பயறு, தட்டாம்பயறு, கம்பு, துவரை, மக்காச்சோளம், பருத்தி பயிர்களை விதைத்தனர். சில நாள் இடைவெளியில் மழை பெய்தால் கூட பயிர்கள் வளர்ந்துவிடும் என்று நம்பி விதைத்த விவசாயிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. தொடர்ந்து மழை பெய்யாததால் மானாவாரி நிலங்களில் விதைத்த பயிர்கள் வெப்பத்தால் காய்ந்து முளைக்காமல் கருகிவிட்டன. இதனால் மானாவாரி விவசாயிகள் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழையை எதிர்பார்த்து மறு விதைப்புக்கு தயாராகி வருகின்றனர். விவசாயிகள் கூறுகையில், 'மழை இல்லாததால் உழுது, விதை, விதைத்தது அனைத்தும் வீணாகி விட்டது. பல ஆயிரம் நஷ்டங்கள் ஏற்பட்டுள்ளன. பருவமும் தவறிவிட்டது. இனி மழை பெய்தால் மறு விதைப்பு செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது என்றனர்.
24-Aug-2025