உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பருத்தி சாகுபடிக்கும் விவசாயிகள் தயக்கம்

பருத்தி சாகுபடிக்கும் விவசாயிகள் தயக்கம்

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தைச் சுற்றியுள்ள மானாவாரி விவசாயிகள் இந்தாண்டு குறைந்தளவிலேயே பருத்தி பயிரிட்டு வருகின்றனர்.திருப்பரங்குன்றம் பகுதியில் வழக்கமாக இந்த சீசனில் காய்கறிகள் அதிகம் சாகுபடி செய்வர். சில ஆண்டுகளாக வெயில் தாக்கம் அதிகம், வேலை ஆட்கள் பற்றாக்குறை, விலை சரிவால் காய்கறிகள் பயிரிடுவதை விவசாயிகள் தவிர்த்து வந்தனர்.அதற்குப் பதிலாக ஆழ்குழாய்கள், கிணறுகளில் தண்ணீர் உள்ள விவசாயிகள் மாற்றுப் பயிராக பருத்தி பயிரிட்டு வந்தனர். சில விவசாயிகள் கூறுகையில், ''கடந்தாண்டு ஏராளமான விவசாயிகள் பருத்தி பயிரிட்டனர். இந்தாண்டு பருத்தி சாகுபடி செய்வதும் குறைந்து விட்டது. மேற்கண்ட காரணங்களால் பெரும்பாலான விவசாயிகள் பருத்திக்கும் ஆர்வம் காட்டவில்லை'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை