உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / தந்தையர், மகன்கள் கிரிக்கெட் போட்டி

தந்தையர், மகன்கள் கிரிக்கெட் போட்டி

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் என்.எக்ஸ்.ஜி., கிரிக்கெட் அகாடமி சார்பில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தந்தையர், மகன்களுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நடந்தது. தந்தையர் ஒரு அணியாகவும், மகன்கள் ஒரு அணியாகவும் மோதினர். இதில் மகன்கள் அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது. பரிசளிப்பு விழாவிற்கு அகாடமி தலைவர் ஹரிஷ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் நவீன்குமார், துரைப்பாண்டி முன்னிலை வகித்தனர். கமல் வரவேற்றார். ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் நிர்மலா, ஜெயராஜ் வெற்றி பெற்றோருக்கு பரிசு வழங்கினர். நிர்வாகி இளையராஜா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி