உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பண்டிகை கால சிறப்பு ரயில்கள்

பண்டிகை கால சிறப்பு ரயில்கள்

மதுரை: ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகைகளை முன்னிட்டு சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. * செப்., 10 முதல் நவ., 26 வரை (புதன் தோறும்) மதுரையில் இருந்து இரவு 8:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06059), சனிக்கிழமை காலை 6:30 மணிக்கு பீகார் மாநிலம் பரவுனி செல்கிறது. மறுமார்க்கத்தில், செப்., 13 முதல் நவ., 29 வரை (சனி தோறும்) இரவு 11:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06060), செவ்வாய் காலை 7:45 மணிக்கு மதுரை வரும். திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் வழியாக செல்கிறது. 16 'ஏசி' முன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. * செப்., 7 முதல் அக்., 26 வரை (ஞாயிறு தோறும்) திருநெல்வேலியில் இருந்து மதியம் 3:40 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06103), மறுநாள் மதியம் 1:00 மணிக்கு கார்நாடக மாநிலம் ஷிமோகா டவுன் செல்கிறது. மறுமார்க்கத்தில், செப்., 8 முதல் அக்., 27 வரை (திங்கள் தோறும்) மதியம் 2:20 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (06104), மறுநாள் காலை 10:45 மணிக்கு திருநெல்வேலி செல்கிறது. சேரன்மகாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம், கீழக்கடையம், பாவூர்சத்திரம், தென்காசி, கடையநல்லுார், சங்கரன்கோவில், ராஜபாளையம், ஸ்ரீவில்லிப்புத்துார், சிவகாசி, திருத்தங்கல், விருதுநகர், மதுரை, கொடைரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், கிருஷ்ணராஜபுரம், எஸ்.எம்.வி.டி., பெங்களூரு வழியாக செல்கிறது. ஒரு 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதிப் பெட்டி, 2 'ஏசி' மூன்றடுக்கு படுக்கை வசதிப் பெட்டிகள், 9 'ஸ்லீப்பர்'பெட்டிகள், 4 பொதுப் பெட்டிகள், 2 சரக்குப் பெட்டிகளுடன் இயக்கப்படுகிறது. பெங்களூரு செல்ல விரும்பும் தென்மாவட்ட பயணிகள் மேற்கண்ட ரயிலை பயன்படுத்திக் கொள்ளலாம். இவற்றுக்கான முன்பதிவு நாளை (செப்., 2) காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி