உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பள்ளியில் தீ விபத்து

பள்ளியில் தீ விபத்து

உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே கருக்கட்டான்பட்டியில் அரசு கள்ளர் தொடக்க மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் ஒரே வளாகத்தில் உள்ளன. இங்குள்ள பழைய வகுப்பறை கட் டடங்கள் பயன்படுத்தப் படாத நிலையில் புதிய கட்டடங்கள் கட்டியுள்ள னர். பழைய கட்டடங் களுக்குள் பயன்படுத்தப் படாத புத்தகங்கள், பழைய பேப்பர்கள், துணிமணிகள், மரச்சாமான்கள் உள்பட தளவாட பொருட்களை வைத்து பூட்டி வைத்துள்ளனர். நேற்று மதியம் 1:20 மணிக்கு பழைய கட்டடத்திற்குள் புகை கிளம்பியது. உடனே போலீசார், தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். ஆசிரியர்கள், கிராமத்தினர் கட்டடத்தை திறந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். பூட்டியிருந்த அறைக்குள் எப்படி தீப்பற்றியது என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை