உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  தீ பாதுகாப்பு பயிற்சி

 தீ பாதுகாப்பு பயிற்சி

மதுரை: மதுரை தல்லாகுளம் தீயணைப்பு நிலையத்தில், தென்மண்டல துணை இயக்குநர் குமார், மாவட்ட அலுவலர் வெங்கட்ரமணன், உதவி மாவட்ட அலுவலர் திருமுருகன் முன்னிலையில் 27 தனியார் பாதுகாவலர்களுக்கு தீ பாதுகாப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. நிலைய அலுவலர், பணியாளர்களுடன் இணைந்து செயல்முறை விளக்கம், முதலுதவி, மின்சாரம் மற்றும் கயிறுகளின் மூலம் தன்னை பாதுகாத்துக் கொள்ளுதல் பற்றிய ஒத்திகை பயிற்சி நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டது. * அனுப்பானடி தீயணைப்பு நிலையத்தில் பயிற்சி நிலைய அலுவலர் அசோக் குமார் தலைமையில் நடந்தது. பயிற்சிபெற்ற தனியார் நிறுவன பாதுகாவலர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை