ரூ.8 லட்சம் மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்
உசிலம்பட்டி: உசிலம்பட்டி 8வது வார்டு சிவன்காளைத்தேவர் தெருவில் பெட்டி கடை வைத்துள்ள பாண்டீஸ்வரி என்பவர் வீட்டில் டி.எஸ்.பி., சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் சோதனை நடத்தி விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். குடியிருப்பு பகுதியில் பாதுகாப்பின்றி பட்டாசு பதுக்கி வைத்திருந்தது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. விரைவில் உரிமம் பெற்ற கடைகளில் மாசுக்கட்டுப்பாடு துறையால் அனுமதிக்கப்பட்ட பட்டாசுகள் மட்டும் விற்கப்படுகிறதா, பாதுகாப்பு உபகரணங்கள் உண்டா என சோதனை நடத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.