முதலுதவி பயிற்சி
மதுரை: காவல்துறை, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் போலீசாருக்கான அடிப்படை முதலுதவி (சி.பி.ஆர்., /பி.எல்.எஸ்.,) பயிற்சி மதுரையில் நடந்தது. எஸ்.பி. அரவிந்த், மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவு இயக்குநர் நரேந்திர நாத் ஜெனா தலைமையில் சிறப்பு டாக்டர்கள் பிரபு, ஷீமா கண்மணி, நான்சி ஆகியோர் உயிர் காக்கும் அவசர நிலை சிகிச்சை குறித்து செயல்விளக்கம் அளித்தனர். மார்க்கெட்டிங் பொது மேலாளர் சிவக்குமார் உட்பட பலர் பங் கேற்றனர்.