உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மதுரை மாநகராட்சிக்கு முதல் பெண் கமிஷனர் நியமனம்

மதுரை மாநகராட்சிக்கு முதல் பெண் கமிஷனர் நியமனம்

மதுரை: மதுரை மாநகராட்சிக்கு முதல் பெண் கமிஷனராக சித்ரா விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார்.மாநகராட்சியில் 2024 பிப்., 2ல் பொறுப்பேற்ற கமிஷனர் தினேஷ்குமார் நகர் பகுதியில் குப்பையை அகற்றும் நடவடிக்கையை தீவிரப்படுத்தினார். ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் ரோடுகளில் சுற்றித்திரியும் மாடுகள் தொல்லையை கட்டுப்படுத்தினார். பல நிறுவனங்களிடமிருந்து ரூ. பல லட்சம் வரி நிலுவையை 'கறார்' காட்டி வசூலித்தார். மாநகராட்சி பணியாளர்கள், அதிகாரிகள், கவுன்சிலர்கள் என அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளை நிறைவேற்றி பாராட்டு பெற்றார். தற்போது கிருஷ்ணகிரி கலெக்டராக மாற்றப்பட்டுள்ளார்.இவரிடத்தில் தமிழக மின்ஆளுமை துறை இணை இயக்குனரான சித்ரா விஜயன் நியமிக்கப்பட்டுள்ளார். கேரளாவை சேர்ந்த இவர், 2019 பேட்ச் ஐ.ஏ.எஸ்., அதிகாரி. திருச்சி, தர்மபுரியில் சப் கலெக்டராக இருந்தார். ஊரக மேம்பாட்டு மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை இயக்குநராகவும் இருந்தார். 1971ல் மதுரை நகராட்சி மாநகராட்சியான பிறகு முதல் பெண் கமிஷனராகவும், 71வது கமிஷனராகவும் சித்ரா விஜயன் பொறுப்பேற்க உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி