ஓட்டல்களில் பழைய பரோட்டாக்கள் விற்பனை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரெய்டு
மதுரை: மதுரை கே.கே.நகர், அண்ணா பஸ் ஸ்டாண்ட் பகுதிகளில் உள்ள பிரபல ஓட்டல்களில் பழைய பரோட்டாக்கள் விற்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.அதிகாரிகள் கூறியதாவது:இங்குள்ள ஓட்டல்களில் பழைய பரோட்டாக்களை விற்பதாக புகார் வந்ததன் பேரில் ஆய்வு நடத்தி 30 பழைய பரோட்டாக்களை பறிமுதல் செய்தோம்.சமையலறை, பாத்திரம் கழுவும் இடம், உணவு சேமிக்கும் அறை அசுத்தமாக இருந்ததால் பிரிவு 55ன் படி நோட்டீஸ் வழங்கி ரூ. ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.உணவகம், பேக்கரி, பலசரக்கு உட்பட உணவு தொடர்பான கடைகளில் உணவோ, பொருளோ தரம் இல்லாமல் இருந்தால் 94440 42322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.புகார் தந்தவரின் பெயர், விவரங்கள் ரகசியம் காக்கப்படும். சம்பந்தப்பட்ட ஓட்டல், கடை மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக தினமும் ஐந்து முதல் ஆறு புகார்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கிறோம் என்றனர்.