உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பயன்பாட்டிற்கு வந்த தரைப்பாலம்

பயன்பாட்டிற்கு வந்த தரைப்பாலம்

மதுரை: மதுரை திருநகர் 7வது பஸ் ஸ்டாப்பிலிருந்து பாலசுப் பிரமணியன் நகருக்கு செல்லும் வழியில் நிலையூர் கால்வாய் தரைப்பாலம் சேதமடைந்ததால் ரூ.15 லட்சத்தில் புதிய பாலம் கட்டப்பட்டது. கட்டுமான பணி காரணமாக பாலசுப்ரமணியன் நகரிலிருந்து திருநகர் செல்வோரும் திருநகரியிலிருந்து பாலசுப்ரமணியன் நகர், பாலாஜி நகர் செல்வோரும் ஹார்விபட்டி வழியாக 3 கி.மீ., சுற்றிச் சென்று திரும்பினர். பாலசுப்பிரமணியன் நகரில் இருந்து 500 மீட்டர் துாரத்திலுள்ள 7வது பஸ் ஸ்டாப்பிற்கு பால் வாங்க 3 கி.மீ., நடந்து செல்ல வேண்டி யிருந்து. இதுகுறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக பணிகள் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு பாலம் திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ