மேலும் செய்திகள்
உலக அமைதிக்காக பண்டரி' நாம சங்கீர்த்தன நிகழ்ச்சி
25-May-2025
மதுரை: மதுரை தல்லாகுளம் லட்சுமி சுந்தரம் அரங்கில், பகவன் நாம பிரச்சார மண்டலி சார்பில் 'மதுரையில் பண்டரி' நிக்ழ்ச்சி சண்டி ஹோமத்துடன் தொடங்கியது.மஹாராஷ்டிரா மாநிலம் பண்டரிபுரத்தில் உள்ள பாண்டுரங்கன், ருக்மணி கோயில் போன்று கோயில் அமைத்து, அங்கு நடப்பது போன்ற பூஜைகளுடன், 'மதுரையில் பண்டரி' நிகழ்வு, நாம சங்கீர்த்தனத்துடன் ஜூன் 1 வரை நடக்கிறது. அங்கு பூஜை செய்யும் அர்ச்சகர்களே இங்கும் பூஜைகளை நடத்துகின்றனர். ரிஷிகேஷ், பத்ராச்சலம், அயோத்தி, புரி, உடுப்பி, துவாரகா, மதுரா நகரங்களைத் தொடர்ந்து, முதல் முறையாக மதுரையில் இந்நிகழ்வு நடக்கிறது.மருதாநல்லுார் சத்குரு கோதண்டராம சுவாமிகள், பிலாஸ்பூர் சச்சிதானந்த தீர்த்த மகா சுவாமிகள், விசாகப்பட்டினம் சவுபாக்கிய புவனேஸ்வரி பீடம் ராமானந்த பாரதி மகாசுவாமிகள் தலைமை வகித்தனர். சட்டசபை எதிர்க்கட்சி துணைத் தலைவர் உதயகுமார் துவக்கி வைத்தார். மீனாட்சி திருக்கல்யாணம், 108 கன்னியா பூஜை, சுமங்கலி பூஜையோடு, விசேஷ சாளக்கிராம பூஜையும் நடந்தது. தினமும் பாகவத இசையுடன், பகவான் நாம சங்கீர்த்தனமும் நடக்கிறது. இதில் நாடு முழுவதும் இருந்து 100 நாம சங்கீர்த்தன கலைஞர்கள் பங்கேற்கின்றனர்.நேபாளத்தில் இருந்து கொண்டு வந்த 1008 சாளக்கிராமங்களை வைத்து பூஜை செய்து, பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்குகின்றனர். வேத பாராய ணம், ருத்ர பாராயணம், ஸஹஸ்ரநாம பாராயணங்களும் நடக்கிறது. இதில் இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பல துறவிகள், பாகவதர்கள், பக்தர்கள் நிகழ்வில் பங்கேற்கின்றனர். மதுரை ராமானந்த சரஸ்வதி சுவாமி வழிகாட்டலில் சென்னை பகவந் நாம பிரசார மண்டலி நிறுவனர் கடலுார் கோபி பாகவதர் ஏற்பாடுகள் செய்துள்ளனர்.
25-May-2025