உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஏலம் விடாமல் ஏமாற்று வேலை: இற்றுப்போன காலி சாக்குகளுக்கான நஷ்டம் யார் பொறுப்பு

ஏலம் விடாமல் ஏமாற்று வேலை: இற்றுப்போன காலி சாக்குகளுக்கான நஷ்டம் யார் பொறுப்பு

250 ரேஷன் கார்டுகள் உள்ள கடைகளுக்கு மாதந் தோறும் நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் குறைந்தபட்சம் 500 மூடை அளவிற்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை கொண்டு வரப்படும். இவற்றை நுகர்வோருக்கு வினி யோகித்தபின் 500 காலி சாக்குகள் கிடைக்கும். கிராமப்புறங்களில் மட்டும் 450 கடைகள் உள்ளன. ஒவ்வொரு தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் 2 முதல் 4 ரேஷன் கடைகள் செயல்படு கின்றன. இந்த முறையில் ஒவ்வொரு கடன் சங்கத்திற்கும் ஆண்டுக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் காலி சாக்குகள் கிடைக்கும். மாவட்ட நிர்வாகம் மூலம் எம்.எஸ்.டி.சி., எனப்படும் மத்திய அரசின் நேரடி ஆன்லைன் டெண்டர் மூலம் தான் ஏல விற்பனை செய்ய வேண்டும். டெண்டர் விடுவதற்கு தனிக்குழு உள்ளது. அவர்கள் தான் ஏலத்தை நடத்தமுடியும். நகர்ப்புற ரேஷன் கடைகளை நிர்வகிக்கும் கூட்டுறவு பண்டக சாலைகள், பாண்டியன் சூப்பர் மார்க்கெட் மூலம் ஆண்டுதோறும் சாக்குகள் ஏலம் விடப்படுகிறது. கிராமப்புற கடைகளில் உள்ள சாக்குகளை 2021க்கு பிறகு 2024 வரை ஏலம் விடவில்லை. இவை விலை போகாததால் இதற்கான நஷ்டத்தை கூட்டுறவுத்துறை எங்கள் தலையில் சுமத்துகிறது என்கின்றனர் விற்பனையாளர்கள். அவர்கள் கூறியதாவது: ரேஷன் கடைகளில் குறுகிய இடத்தில் அடுக்கி யிருந்த சாக்குகள் மழை, வெயிலால் உதிர்ந்தும் எலிகளால் கடித்தும் சேதமடைந்தன. 2024 ல் சாக்குகளை ஏலம் விட்ட போது ஒரு சாக்கு ரூ.16க்கு ஏலம் போனது. ஏலம் எடுத்த வர்கள் 40 முதல் 60 சதவீத சாக்குகளை 'டேமேஜ்' என்ற பெயரில் கழித்து விட்டனர். இந்த நஷ்டத் தொகையை விற்பனை யாளர்கள் அல்லது கடன் சங்க செயலர்கள் தான் செலுத்த வேண்டும் என்கின்றனர் அதிகாரிகள். ஏலம் நடத்தாதது தனிக் குழுவின் பொறுப்பு என்பதால் அந்த குழு நிர்வாகிகள் அல்லது அதிகாரிகளே நஷ்டத்திற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ