மேலும் செய்திகள்
எஸ்.ஐ.,களுக்கு பயிற்சி நிறைவு
07-Jan-2025
மதுரை: மத்திய வேளாண் அமைச்சகம் சார்பில் மதுரை மாட்டுத்தாவணி நெல் வணிக வளாகத்தில் அறிவியல் பட்டதாரிகளுக்கு இலவச வேளாண் மற்றும் கால்நடை தொழில்முனைவு பயிற்சி அளிக்கப்படுகிறது.பி.எஸ்சி., விவசாயம், தோட்டக்கலை, மீன்வளத்துறை, பால்வளத்துறை, மனையியல், கால்நடை, உணவுத்தொழில்நுட்பம், பயோ டெக்னாலஜி, ஊரக மேம்பாட்டு அறிவியல், கம்யூனிட்டி சயின்ஸ், சுற்றுச்சூழல் அறிவியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் படித்த 60 வயதுக்குட்பட்டோர் 45 நாட்கள் பயிற்சியில் பங்கேற்கலாம். உணவு, தங்குமிடம், பயிற்சி இலவசம்.கால்நடை வளர்ப்பு, தேனீ, காளான், ஆடு, மாடு, மீன் வளர்ப்பு, பண்ணை அமைத்தல், காய்கறி, பழங்கள் பதப்படுத்துதல், வேளாண் இடுபொருள் மையம், இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு பின் தனிநபருக்கு ரூ.20 லட்சம் வரையான வங்கிக் கடனுதவிக்கு வழிகாட்டப்படும். இதில் எஸ்.சி., எஸ்.டி., பெண்களுக்கு கடன் திட்டத்தில் 44 சதவீத மானியம், மற்ற பிரிவினருக்கு 36 சதவீத மானியம் வழங்கப்படும். கூடுதல் தகவலுக்கு: 94860 19477.
07-Jan-2025