தேனீ வளர்ப்பு இலவச பயிற்சி
மதுரை: மதுரை வேளாண்மை அறிவியல் நிலையம் சார்பில் 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ், 26 நாட்களுக்கான தேனீ வளர்ப்பு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சி அக்.8 முதல் நவ. 10 வரை அளிக்கப்பட உள்ளது. காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை 'பயோமெட்ரிக்' வருகைப் பதிவேடு முறையில் பயிற்சி அளிக்கப்படும். 35 வயதுக்குட்பட்ட 25 பேருக்கு முன்னுரிமை அடிப்படையில் அனுமதி. குறைந்தது 8ம் வகுப்பு தேர்ச்சி வேண்டும். தேவைப்படுவோருக்கு மதிய உணவு, தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். பயிற்சி முடிவில் போக்குவரத்து கட்டணம் வழங்கப்படும். ஆர்வமுள்ளோர் TNSDC இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். முன்பதிவுக்கு: 99652 88760.