உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் வசதி

ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ் வசதி

மதுரை : மதுரையில் இந்திய தேசிய ஓய்வுபெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம் மதுரைத் தலைவர் ஞானேஸ்வரன் நடந்தது.துணைத் தலைவர் கோதண்டராமன் வரவேற்றார். பொருளாளர் ராஜேந்திரன் வரவு செலவு கணக்கை தாக்கல் செய்தார். செயலாளர் மோகன்ராம் தீர்மானங்கள் குறித்து பேசியதாவது: 70 வயதை நிறைவு செய்த ஓய்வூதியர்களுக்கு கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியர் இறந்தால் குடும்பத்திற்கு ரூ. 1.5 லட்சம், குடும்ப ஓய்வூதியர் இறந்தால் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். காப்பீடு திட்டத்தில் ஒவ்வொரு சிகிச்சைக்கும் உதவித்தொகை விபரம் தெரிவித்து அரசாணை வெளியிட வேண்டும். ஓய்வூதியர்களுக்கு இலவச பஸ்வசதி வேண்டும் என்றார். இணைச் செயலாளர் துரை நன்றி கூறினார். இணைச் செயலாளர் தேவராஜ், கவுரவத் தலைவி விஜயலட்சுமி, ஆலோசகர் சுப்புராமன் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !