உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச சணல் பயிற்சி

இலவச சணல் பயிற்சி

மதுரை: தேசிய சணல் வாரியம் சார்பில் மதுரை எஸ்.எஸ்.காலனியில் உள்ள பெட்கிராட் நிறுவனத்தில் சணல் சார்ந்த இலவச தையல் பயிற்சி 35 நாட்களுக்கு அளிக்கப்படுகிறது. ஜூட் பேக், லேப்டாப், லஞ்ச், ஸ்கூல், வாட்டர் கேன், ஷாப்பிங் உட்பட 17 வகையான பைகள் தயாரிக்க கற்றுத்தரப்படும். எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 45 வயதிற்குட்பட்ட பெண்கள் பங்கேற்கலாம். பயிற்சிக்கான உபகரணங்கள் இலவசம். மத்திய அரசின் சான்றிதழ், தொழில் முனைவோருக்கான உத்யம் சான்றிதழ், கைவினைக் கலைஞர்களுக்கான அடையாள அட்டை பெற்றுத்தரப்படும். ஆன்லைன் மார்க்கெட்டிங், சந்தைப்படுத்துதல், திட்டஅறிக்கை குறித்து விளக்கப்படும். பயிற்சிக்குப் பின் மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெற்று தொழில் துவங்க வழிகாட்டப்படும். முன்பதிவுக்கு: 89030 03090.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ