உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச மென்பொருள் பயிற்சி

இலவச மென்பொருள் பயிற்சி

மதுரை: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலம் ஆதிதிராவிடர், பழங்குடி இளைஞர்களுக்கு மென்பொருள், வலைதளம் வடிவமைப்பாளர், பயன்பாட்டு மென்பொருள் மேம்பாட்டாளர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இளங்கலை பொறியியல், பி.எஸ்சி., கணினி அறிவியல் பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். நிதிசார்ந்த பயிற்சிகள் பெற இளங்கலை வணிகவியல், பி.பி.ஏ., பாடங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது 18 முதல் 35 க்குள், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ், தகுதியானவர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தத்தரப்படும். விவரங்கள், பயிற்சியில் சேர 'www.tahdco.comஎன்ற முகவரியில் பதிவு செய்யலாம் என கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை