உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / இலவச பயிற்சி வகுப்பு

இலவச பயிற்சி வகுப்பு

மதுரை: தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும், இரண்டாம் நிலை காவலர், சிறப்பு காவலர், தீயணைப்பாளர் பணிக்கு, 3,665 காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இத்தேர்வுக்கு தயாராகும் மாணவ - மாணவியருக்கு, புதுார் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் இலவச பயிற்சி வகுப்பு நடந்து வருகிறது. இதேபோல், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன. பயிற்சியில் சேர விரும்புவோர், ஆதார் அட்டை, 2 பாஸ்போர்ட் அளவுள்ள போட்டோக்கள் உள்ளிட்டவற்றுடன் வேலைவாய்ப்பு மையத்தில் நேரடியாக அணுகலாம். மேலும் விபரங்களுக்கு 96989 36868ல் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் பிரவீன் குமார் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை