வெல்டிங் இலவச பயிற்சி முகாம்
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் ரூட்செட் பயிற்சி நிலையத்தில் ஒரு மாத வெல்டிங் இலவச பயிற்சி முகாம் டிச., 22ல் துவங்கி 30 நாட்கள் இலவசமாக நடக்கிறது. தினமும் காலை 9:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை நடக்கும் இம்முகாமில் பங்கேற்க விருப்பமுள்ள 18 - 50 வயது வரையுள்ள ஆண்கள் விண்ணப்பிக்கலாம். உணவு, தங்குமிடம் இலவசம். டிச., 20க்குள் 96262 46671ல் முன்பதிவு செய்ய வேண்டும். பயிற்சிக்கு வருபவர்கள் ஆதார், ஸ்மார்ட் கார்டு நகல், இரண்டு பாஸ்போட் சைஸ் போட்டோ, கல்வி மாற்றுச்சான்றிதழ் அல்லது மதிப்பெண் பட்டியல் நகல், ஜாதி சான்றிதழ், வங்கி பாஸ் புக் முதல் பக்கம் நகல் கொண்டு வர வேண்டும். 100 நாள் வேலை அட்டை உள்ள குடும்பத்தினர், கிராமப்புற நபர்களுக்கு முன்னுரிமை என இயக்குனர் பாலாஜி தெரிவித்தார்.