உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கூட்டாளியை கொல்ல வந்த நண்பர்கள்

கூட்டாளியை கொல்ல வந்த நண்பர்கள்

வாடிப்பட்டி: வாடிப்பட்டி எஸ்.ஐ., கஜேந்திரன், போலீசார் தனசேகரன், முத்துகிருஷ்ணன் வாடிப்பட்டி நீதிமன்றம் அருகே நான்கு வழிச்சாலையில் வாகனசோதனையில் ஈடுபட்டனர். அப்போது டூவீலரில் ஆயுதங்களுடன் வந்த சமயநல்லுார் அண்ணா நகர் சூர்யா 23, சத்தியமூர்த்தி நகர் கண்ணனை 23, கைது செய்தனர்.இவர்களின் முன்னாள் கூட்டாளி சமயநல்லுார் பகுதி சரண் 23, வழக்கு விசாரணைக்காக வாடிப்பட்டி நீதிமன்றத்திற்கு கடந்த மார்ச் 25ல் வந்துள்ளார். சரணை நீதிமன்ற வாசலில் கொலை செய்ய திட்டமிட்டு வந்தபோது போலீசார் அதிகம் இருந்ததால் திரும்பி சென்றனர். மார்ச் 27ல் மீண்டும் சரணை கொலை செய்ய வந்தபோது பிடிபட்டனர். இருவர் மீதும் ஏற்கனவே வழக்குகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை