உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் மாதந்தோறும் தொடர்வதால் விரக்தி

சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்கள் மாதந்தோறும் தொடர்வதால் விரக்தி

மதுரை: மதுரை மாநகராட்சி ஒப்பந்த பணியாளர்களுக்கு ஜனவரி சம்பளம் இதுவரை வழங்கப்படாததால் அதிருப்தியில் உள்ளனர்.மாநகராட்சியில் சுகாதாரம், பொறியியல், ஓட்டுநர்கள், மண்டல, வார்டு அலுவலகங்களில் 300க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதம் 5 முதல் 9 ம் தேதிக்குள் சம்பளம் வழங்கப்படும். ஆனால் ஜனவரி சம்பளம் இதுவரை வழங்காததால் அதிருப்தியில் உள்ளனர்.அவர்கள் கூறியதாவது: நிரந்தர பணியாளர்களுக்கு இணையான பணிகளை மேற்கொள்கிறோம். மாதந்தோறும் உரிய நேரத்தில் சம்பளம் வழங்குவதில்லை. வங்கி, வாகன கடன்கள் வைத்துள்ள பணியாளர்கள் இ.எம்.ஐ., செலுத்துவதில் பெரும் சவாலாக உள்ளது. சம்பளம் தாமதம் ஆகும்போது தேவையின்றி அபதாரம் செலுத்த வேண்டியுள்ளது. சம்பளம் தாமதம் குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை. கமிஷனர் சித்ரா இப்பிரச்னை குறித்து விசாரித்து ஒப்பந்த பணியாளர்களுக்கும் உரிய நேரத்தில் சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை