மேலும் செய்திகள்
தமுக்கத்தில் இயற்கை விளைபொருட்கள் கண்காட்சி
12-Oct-2025
மதுரை: மத்திய அரசின் கைவினைத்துறை சார்பில் மதுரை ராஜா முத்தையா மன்றத்தில் 'காந்தி சில்ப் பஜார்' என்னும் கைவினை கலைஞர்களின் உற்பத்திப் பொருட்களின் கண்காட்சி நவ.7 ல் துவங்கி நடந்து வருகிறது. இக்கண்காட்சியில் பல்வேறு மாநிலங்களின் 70க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம் பெற்றுள்ளன. ஏற்பாடு செய்துள்ள பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராம் கூறியதாவது: நவ.16 வரை நடைபெறும் கண்காட்சியில் உ.பி., மாநிலத்தின் கார்பெட், விரிப்புகள், தமிழகத்தின் வாழை நாரில் தயாரான பொருட்கள், கேரளாவின் மண்பாண்ட பொருட்கள், ஆந்திராவின் மரச்சாமான்கள், மதுரை சுங்குடி சேலைகள், ராமேஸ்வரத்தின் பனையோலை பொருட்கள், பிரம்பு, சணல், கண்ணாடிகளால் உருவான பொருட்கள், கலை, அழகுப்பொருட்கள் என ஏராளமான கைவினைப் பொருட்கள் இடம்பெற்றுள்ளன. கண்காட்சி காலை 10:00 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும். அனுமதி இலவசம் என்றார்.
12-Oct-2025