மருத்துவமனையில் குப்பை அகற்றம்
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சேரும் குப்பையை தரம்பிரித்து சேகரிக்க போதுமான பணியாளர்கள் இல்லாமல் மொத்தமாக சேகரித்து வருகின்றனர். இதனால் குப்பையை அப்புறப்படுத்த வரும் நகராட்சி பணியாளர்கள் தரம்பிரித்து வழங்கினால்தான் குப்பையை எடுத்துச் செல்வோம் என்று கூறுவதால் பல நாட்களாக குப்பை தேங்கி விடுகிறது.இவ்வாறு தேங்கிய குப்பை அகற்ற எம்.எல்.ஏ., அய்யப்பனிடம் பொதுமக்கள் புகார் செய்தனர். இதையடுத்து நேற்று அய்யப்பன் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவமனை, நகராட்சி சுகாதார பணியாளர்களை ஒருங்கிணைத்து குப்பையை பிரித்து அகற்ற ஒத்துழைப்பு வழங்க ஏற்பாடு செய்தார். இதேபோல் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரிடம் குப்பையை மக்கும், மக்காதவை எனத் தரம்பிரித்து வழங்க விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தினசரி வரும் குப்பையை சுகாதார பணியாளர்கள் தரம்பிரித்து வழங்கவும் கேட்டுக் கொண்டார்.