அழகர்கோவில் ரோட்டில் குப்பை
அழகர்கோவில் : அழகர் கோவில் பொய்கைகரைப்பட்டி பகுதியில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். மெயின் ரோட்டின் ஓரங்களில் இரண்டு பகுதிகளிலும், காலி இடங்களிலும் குப்பையை குவித்துள்ளனர். இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர். காற்று வீசினால் பறந்து வழியெங்கும் சிதறிக் கிடக்கின்றன.'துப்புரவு பணியாளர்கள் வாரம் ஒரு முறை மட்டுமே வருகின்றனர். சில நேரங்களில் அதுவும் இல்லை. வீட்டில் கொசுத் தொல்லையும் துர்நாற்றம் தாங்கமுடியாமல் இங்கே கொட்டுகிறோம். வீட்டில் எத்தனை நாட்கள் குப்பையை சேமிக்க முடியும். குழந்தைகள் வயதானோர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர். குறுக்குத் தெருக்களில் ரோடும் அமைக்கவில்லை எந்த அடிப்படை வசதியும் கிடைக்காமல் அவதிப்படுகிறோம்' என்று அப்பகுதியினர் தெரிவித்தனர்.