உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / எரிவாயு தகன மேடை திறப்பு

எரிவாயு தகன மேடை திறப்பு

வாடிப்பட்டி: வாடிப்பட்டியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் ரூ. 1.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட நவீன எரிவாயு தகன மேடை மக்கள் பயன்பாட்டுக்கு வந்தது. பேரூராட்சியின் சுற்றுப்பகுதிகளில் தாதம்பட்டி, நீரேத்தான், போடிநாயக்கன்பட்டி, குலசேகரன் கோட்டை, தாதப்பநாயக்கன்பட்டி, மேட்டு நீரேத்தான், ராமநாயக்கன்பட்டி, சாணாம்பட்டி, பெருமாள்பட்டி, சல்லக்குளம் கிராமங்கள் உள்ளன. இப்பகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட இறப்புகள் நிகழும் போது தகனம் செய்ய மக்கள் சிரமமடைந்தனர். இதனால் ஏற்கனவே இருந்த நீரேத்தான் மயானத்தில் புதிய எரிவாயு தகனமேடை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை