உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பொதுக்குழு கூட்டம்

பொதுக்குழு கூட்டம்

மதுரை: மதுரையில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுக் குழுக் கூட்டம் மாவட்ட தலைவர் முருகேசன் தலைமையில் நடந்தது.கல்வி மாவட்ட செயலாளர் தனபாக்கியம் வரவேற்றார். மாநில பொதுக்குழு உறுப்பினர் அருள்தாஸ், மாவட்ட துணை செயலாளர் சங்கர் முன்னிலை வைத்தனர். மாநில செயலாளர் ஜெயராஜ், மாவட்ட செயலாளர் சீனிவாசன் பேசினர். கூட்டத்தில் மே 1, 2, 3ல் திண்டுக்கல் 7 வது மாநில மாநாட்டின் பேரணியில் மதுரைக் கிளையில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. மதுரைக்கு ஒதுக்கப்பட்ட மாநாட்டு நிதியை மாநில செயலாளரிடம், மாவட்ட பொருளாளர் எமிமாள் ஞானசெல்வி வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை