உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கோயிலுக்கு சூரபத்மன் மரச்சிற்பம் காணிக்கை

கோயிலுக்கு சூரபத்மன் மரச்சிற்பம் காணிக்கை

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சூரபத்மன் மரச் சிற்பம் உபயமாக வழங்கப்பட்டது.கோயிலில் சஷ்டி, தெப்பத்திருவிழா, பங்குனித்திருவிழாக்களில் ஆண்டுக்கு மூன்று முறை சூரசம்ஹார லீலை நிகழ்ச்சி நடைபெறும். அந்நிகழ்ச்சிகளில் ரத வீதிகளில் சூரபத்மனை, சுப்பிரமணிய சுவாமி விரட்டிச் சென்று வதம் செய்யும் நிகழ்ச்சி நடக்கும். இதற்காக மூங்கில், வண்ண பேப்பர்களால் சூரபத்மன் உடல், வெவ்வேறு தலைகள் தயார் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும்.சூரசம்ஹார லீலை நிகழ்ச்சிக்காக சூரபத்மன் மரச் சிற்பம், சிங்கம், காளை, விநாயகர் தலைகளுடன் ரூ. 1.65 லட்சத்தில் சூரபத்மன் மரசிற்பத்தை அறங்காவலர் பொம்ம தேவன் கோயிலுக்கு உபயமாக வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ