ஆடு, கோழி வளர்ப்பு பயிற்சி
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியல் கல்லுாரி சாலையிலுள்ள கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பயிற்சி, ஆய்வு மையத்தில் ஆக.13ல் வெள்ளாடு வளர்ப்பு, ஆக. 20ல் நாட்டுக்கோழி வளர்ப்பு பயிற்சி முகாம்கள் நடக்க உள்ளன. பயிற்சியின் முடிவில் சான்றிதழ் வழங்கப்படும். ஆர்வமுள்ள கால்நடை வளர்ப்பு விவசாயிகள், சுயதொழில் துவங்க ஆர்வமுள்ள இளைஞர்கள், பெண்கள் பயனடையலாம். விபரங்களுக்கு 0452 -- 2483 903ல் அறியலாம் என மைய தலைவர் டாக்டர் சிவசீலன் தெரிவித்தார்.