உள்ளூர் செய்திகள்

 கோலாட்ட விழா

மதுரை: ஸ் ரீ சேவா மண்டலி மகளிர் கலாசார அணி சார்பில் கோலாட்ட நிகழ்ச்சி மதுரை எஸ்.எஸ்.காலனி பிராமணர் கல்யாண மகாலில் நடந்தது. சின்மயா மிஷன் துணைத் தலைவர் கோபால்சாமி தலைமை வகித்தார். ஸ்ரீ சேவா மண்டலி தலைவர் லட்சுமி மணிகண்டன் வரவேற்றார். தாம்பிராஸ் மாவட்ட தலைவர் ஜெயஸ்ரீ கோலாட்டத்தை துவக்கி வைத்தார். நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி, மார்கழி மாத கோலப்போட்டிக்கான பரிசுகளை தாம்பிராஸ் தென்மண்டல தலைவர் இல.அமுதன் வழங்கினார். வழக்கறிஞர் சங்கரசுப்பிரமணியன் சிறப்புரையாற்றினார்.ராஜேஸ்வரி வாழ்த்தி பேசினார். செயலாளர் வனிதா நரசிம்மன் நன்றி கூறினார். உஷாஸ்ரீனி வாசன், வெங்கட்ராமன் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ