வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அப்புறம் என்ன மன்னர் குடும்பமும், கொத்தடிமைகளும் ஹாப்பிதானே?
போக்குவரத்துக் கழகத்தின் மதுரை கோட்ட அலுவலகம் பைபாஸ் ரோட்டில் உள்ளது. இங்கு மொபசல் பஸ்களுக்கான டெப்போ உள்ளது. டிரைவர், கண்டக்டர்களுக்கு பணி ஒதுக்கீடு என்பது 'யூனியன் கோட்டா' என்ற அடிப்படையில் உள்ளது. இந்த டெப்போவில் 33 வெளியூர் 'ரூட்'களில் பஸ்கள் இயக்கப்படுகின்றன. 6 சிறப்பு 'ரூட்'கள் உள்ளன. இவற்றில் 13 'ரூட்'களில் பணியாற்ற போட்டா போட்டி உள்ளது. காரணம் இந்த 'ரூட்'டில் அதிகளவில் லக்கேஜ்கள் ஏற்றுவதன் மூலம் ஊழியர்களுக்கு ஏராளமான 'வரும்படி' கிடைக்கிறது. இதனால் இந்த 'ரூட்'களை பெற ஊழியர்கள் ஆறு மாதங்களுக்கு ரூ.50 ஆயிரம் வரை 'சம்திங்' தர தயாராக இருக்கின்றனர்.போக்குவரத்து நிர்வாகமும் வரும்படியான 13 'ரூட்'களையும் ஆளும்கட்சி தொழிற்சங்கத்திற்கு 7, இரு முக்கிய எதிர்க்கட்சிக்கு 4, மீதியுள்ளவை இதர சங்கங்களுக்கு என பிரித்து கொடுத்துவிடுகிறது. இதன்படி ஊழியர்களை நியமித்து தொழிற்சங்கங்கள் 'அன்பளிப்பு' பெற்றுக் கொள்கின்றன. 'யூனியன் கோட்டா' அடிப்படையில் பணி ஒதுக்கீடு கூடாது என 2008ல் ஊதிய ஒப்பந்த பேச்சு வார்த்தையில் முடிவானது என்றாலும் அது மீறப்படுகிறது. தவிர நீதிமன்றமும் 'யூனியன் கோட்டா' அடிப்படையில் பஸ்களை இயக்கக்கூடாது. டிரைவர், கண்டக்டர்களின் சீனியாரிட்டி அடிப்படையில் சுழல் முறையில் பஸ் 'ரூட்'களை ஒதுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.இருப்பினும் அரசியல் பின்புலம் உள்ள தொழிற்சங்கங்கள் புதிய முறையில் செயல்படுகின்றன. தற்போது 'மேனேஜ்மென்ட் கோட்டா' என்ற பெயரில் டிரைவர், கண்டக்டர்களை நியமிக்கின்றனர். மேலும் சீனியாரிட்டி லிஸ்ட்டையும் வெளியிடுவது இல்லை. அரசு பஸ் ஊழியர்கள் கூறுகையில், ''மதுரை புறநகர் டெப்போ, உசிலம்பட்டி டெப்போவில் இதுபோன்ற நிலை உள்ளது. 2008 ஒப்பந்த முடிவையோ, நீதிமன்ற தீர்ப்பையோ தொழிற்சங்கங்கள் மதிப்பதில்லை. தற்போதும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இதுகுறித்த வழக்கு நடந்து வருகிறது. எப்போதுதான் நிலைமை மாறுமோ தெரிய வில்லை'' என்றனர்.
அப்புறம் என்ன மன்னர் குடும்பமும், கொத்தடிமைகளும் ஹாப்பிதானே?